லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடமிருந்து வெளியான நற்செய்தி

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடமிருந்து வெளியான நற்செய்தி

நவம்பர் 12 முதல் 28 வரை 03 எரிவாயுக் கப்பல்கள் நாட்டிற்கு வரவிருப்பதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 12-14 திகதிகளில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும், நவம்பர் 15-17 திகதிகளில் கொழும்பு துறைமுகத்திற்கும், நவம்பர் 24-28 திகதிகளில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் எரிவாயுக் கப்பல்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது எல்பிஜி முனையம் வழியாக உள்ளூர் சந்தைக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்கான தேவையான ஒப்புதல்களைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம்

எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உள்நாட்டு நுகர்வோர் மற்றும் வர்த்தக சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு அந்நிறுவனம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடமிருந்து வெளியான நற்செய்தி | Good News For Consumers From Laugfs Gas

மேலும் "இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை எல்பிஜி சந்தைக்கு சேவை செய்து வரும் ஒரு உள்ளூர் நிறுவனம் என்ற முறையில், எரிவாயு விநியோகத்தை மீட்டெடுப்பதற்கும் நீண்டகால விநியோக நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.