வீடு கட்டித் தருவதாகக் கூறி 38.77 மில்லியன் பண மோசடி: பெண் உட்பட இருவர் கைது
வீடு கட்டித் தருவதாகக் கூறி தனிநபர்களிடமிருந்து ரூ.38.77 மில்லியன் பண மோசடி செய்த 27 வயது ஆண் மற்றும் 19 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மோசடி குறித்து பெறப்பட்ட முறைப்பாட்டையடுத்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் நேற்று (27) இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தங்களை நிறுவன பணிப்பாளர்களாக காட்டிக்கொண்டு, வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
இருப்பினும் வீடுகள் பகுதியளவில் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இருவரும் பூகொட மற்றும் தொம்பே பகுதியைச் சேர்ந்தவர்கள்.

நிதி மோசடி தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.