மூதூர் பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு
எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மூதூர் காவல் பிரிவில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (24) இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது முன்னால் சென்ற லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
லொறியின் சாரதி கைது
தொடர்ந்து மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர் தூக்கி வீசப்பட்டு லொறியின் சில்லில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றுமொரு இளைஞர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் உடல் மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு மூதூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் மூதூர் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.