இரு குழுக்களுக்கு இடையிலான மோதல்...! அடித்து கொல்லப்பட்ட இளைஞர்
மொனராகலையில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மெதகமை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23-10-2026) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
காதல் விவகாரம் காரணமாக இரு குழுக்களுக்கு இடையில் மோதலில் அவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.