இன்றைய ராசி பலன் 23 செப்டம்பர் 2026

இன்றைய ராசி பலன் 23 செப்டம்பர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்கள் வேலை தொடர்பாக உயர் அதிகாரிகள் திட்டங்களை பேசி முடிவு செய்து செயல்படுவது நல்லது. உங்களுக்கான பொறுப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நீண்ட கால ஒப்பந்தங்கள், ஊதிய உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய நிதிநிலை சீராக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனமான அணுகுமுறை தேவைப்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிறிய கருத்து வேறுபாடுகளை சமாளிக்க பொறுமையில் மற்றும் இனிய பேச்சுத் தேவைப்படும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வெளியூர், வெளிநாடு தொடர்பான வர்த்தகம் செய்யக்கூடியவர்கள் அதன் விதிமுறைகளை சரியாக பின்பற்றவும். பேச்சு வார்த்தைகளிலும், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க உங்கள் திறன் உதவும். முக்கிய ஆவணங்களை சரி பார்த்து செயல்படுவது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும்.

 

 

உடனடியான லாபத்தை பெறுவதற்கான அபாயகரமான முதலீடுகளை தவிர்க்கவும். வேலை மட்டும் தொழில் முறை பயிற்சிகள் எதிர்கால வருமான வாய்ப்புகளை வலுப்படுத்தும். இன்று உங்கள் குடும்பத்தினருடன் பயணம் செல்ல வாய்ப்புகள் உண்டு. உங்கள் துணையுடன் நிதானமாகவும், மோதலை தவிர்க்கும் விதமாக பேசுவது நல்லது.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று எழுத்துப் பணி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் தீரும். முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். உங்களுடைய வேலை மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக விதிமுறைகள் மற்றும் தகவல்களை சரி பார்க்கவும். இன்று வேலையில் உள்ள நுணுக்கமான விஷயங்களைக் கூட கவனமாக சரிபார்க்கவும். நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். காதல் உறவில் உங்களுடைய உணர்ச்சி ரீதியான உரையாடல் உங்களுடைய நெருக்கத்தை அதிகரிக்கும். இன்று உங்களுடைய மனசோர்வு நீங்கும். இலகுவான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக வாடிக்கையாளர்கள் சந்திப்பு, விற்பனையாளர்களுடன் பேச்சுவார்த்தை, ஆலோசனை கூட்டங்கள் போன்ற விஷயங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள்.இன்று உங்களுடைய நிதிப்பொருட்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். சேமிப்பை மேம்படுத்தும் விதமாக திட்டங்களில் ஈடுபடவும். காதல் விஷயத்தில் உங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். திருமணம் ஆகாதவர்களுக்கு இன்று காதல் மலர வாய்ப்பு உண்டு. பரபரப்பான வேலை நாட்களுக்கு இடையே உங்களுடைய உடல் நலனை தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதன் மூலம், பணிகளில் உள்ள நிலைமை சீராகும். இன்று எல்லா பணிகளையும் நீங்களே செய்வதை விட குழுவாக செய்வது நன்மை தரும். பணியிடத்தில் உள்ள போட்டிகளை சமாளிக்க திறனுடன் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்களுடைய செலவுகளை தணிக்கை செய்வதால் எதற்காகத்தில் தட்டுப்பாடுகளை குறைக்க முடியும். இன்று சில முக்கியமான வேலைகளை முடிப்பதில் உங்கள் துணைக்கு உதவுவீர்கள். துணையுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்த்து விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். இன்று நார்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளத் தவறாதீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஊடகத்துறை, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வுகளை கண்டறிவீர்கள், இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் ஒழுக்கத்தையும், செலவுகளை அர்த்தமுள்ளதாகவும் வைத்துக் கொள்ளவும். முதலீடு சார்ந்த விஷயங்களை அவசரப்பட வேண்டாம். இன்றுஉங்களில் காதல் உறவில் இனிமையும், திருமண வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் குறித்து விவாதிப்பீர்கள். இது உங்கள் துணையுடன் நெருக்கத்தை அதிகரிக்கும். இன்று வேலைப்பளு காரணமாக மனசோர்வு ஏற்படலாம். இன்று கல்வி தொடர்பான விஷயங்களை செலவுகள் அதிகரிக்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக கடினமாக உழைப்பீர்கள். மேலும் உங்கள் ஒழுக்கமான செயல்பாடு அனைவரிடமும் கவனத்தை பெறும். பணியிடத்தில் உங்களுடைய பொறுப்புக்களை முடிப்பது, தொழில் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பது என இந்த நாள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். அமைதியான வீட்டு சூழல் இன்று உங்கள் உறவில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணியிடத்தில் உள்ள விரக்தியை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதை தவிர்க்கவும். உடல் நலனை மேம்படுத்தும் விதமான உடற்பயிற்சி செய்வது, உணவுகள் எடுத்துக் கொள்ளவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் மற்றும் விற்பனை துறையில் இருப்பவர்கள் உங்களுடைய திட்டம் முன்மொழிவுகள் பிறர் வரவேற்பார்கள். நீண்ட கால கடின உழைப்பிற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய வேலை அல்லது தொழில் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

 

எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன், அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயவும். இன்று ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இருப்பினும் நிதானமான செயல்பாடு வெற்றியைத் தரும். இன்று உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நேர்மையான உரையாடல் உங்கள் உறவில் உள்ள நம்பிக்கையை ஆளப்படுத்தும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வேலை அல்லது தொழில் தொடர்பாக அடுத்த இலக்கை நோக்கி அவசரப்படாமல் உங்கள் பொறுப்புக்கள் உணர்ந்து முன்னேறவும். கடினமான நேரத்தில் உங்களுக்கு சிலரின் நல்ல ஆலோசனை கிடைக்கும். இன்றுயாருக்கும் உன் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். நீண்ட காலம் சேர்த்த பணம் சரியான விதத்தில் முதலீடானது சேமிக்க முயற்சிக்கவும். உங்கள் நிதி சுமையை அதிகரிக்கும் விதமான குடும்பத்தின் சில தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். அதனால் சரியான நிதி திட்டமிடல் தேவைப்படும். உடல் நலனை பராமரிப்பதில் கவனம் செலுத்தவும். மிகவும் குளிர்ச்சியான பானங்களை எடுத்துக் கொள்வதை தவக்கவும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான பொறுப்புக்கள் கிடைக்கலாம். இது, வேலை தொடர்பான நம்பிக்கையை அதிகரிக்கும். மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் இன்று உங்களுடைய தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள்.

 

இன்றுஉங்களுடைய நிதி பாதுகாப்பான விஷயங்களில் முதலீடு செய்வது அல்லது செலவிடுவதில் இருக்கட்டும். உங்களுக்கு நம்பகமான அணுகுமுறைகளை மட்டுமே பின்பற்றுவது நல்லது. இன்று கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை தவிர்க்கவும். உங்களுடைய வேலைப்பளு காரணமாக துணையிடம் நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்படலாம். இன்று உடல் வலிமை மற்றும் ஆற்றலை உணருவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதானமான மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகளால் சாதனைகளை படைப்பீர்கள். அலுவலகப் பணிகளில் சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்பு உண்டு. உங்களுடைய செயல்பாடுகளில் கவனச் சிதறல்களை தவிர்க்கவும். இன்று அவசரப்பட்டு முதலீடு செய்வது மற்றும் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டிய நாள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறது. இன்று உங்கள் வாழ்க்கை துணை நேரம் செலவிட ஒதுக்கவும். இது உங்கள் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க உதவும். உடல் நலனை மேம்படுத்தும் யோகா, தியானம் போன்ற விஷயங்களை செய்ய தவறாதீர்கள்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய முந்தைய முயற்சிகளுக்கான உறுதியான பலன்களை பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு ஊக்கத்தொகைகள் அல்லது புதிய வாய்ப்புகள் வழங்கப்படலாம். நீண்ட கால செலவு திட்டங்களை தயாரிக்க உகந்த நாள். இது எதிர்காலத்திற்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும். காதல் விஷயத்தில் துணையுடன் உணர்வு பூர்வமான நெருக்கத்தை பலப்படுத்துவீர்கள். இன்று கால் அல்லது தொடை பகுதிகளில் தசை பிடிப்பு அல்லது வலி உணர்வீர்கள். இன்று உங்கள் பிள்ளைகளின் ஆதரவு மன மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.