இன்றைய ராசி பலன் 20 செப்டம்பர் 2026

இன்றைய ராசி பலன் 20 செப்டம்பர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை, குடும்ப பொறுப்புகள் தொடர்பான சிக்கல்கள் சரி செய்ய முடியும். தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். நண்பர்கள், பணிக்குழுவுடன் உள்ள கருத்து வேறுபாடுகளை சரி செய்ய முடியும். உங்களுடைய வேலையை முடிப்பதிலும், பதவி உயர்வு பெறுவதற்கான திட்டமிடலில் ஈடுபடுவீர்கள். இன்று தெளிவான யோசனையுடன் பணியிட சூழலை சமாளிக்க முடியும். கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான சில பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இன்று நிலுவையில் உள்ள பணம் பெறுவது தொடர்பாக சரி பார்க்கவும். பெரிய நிதி இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய ஒவ்வொரு பணியையும் திட்டமிட்டு செய்வதன் நன்மை தரும். இன்று பணி அழுத்தம் மற்றும் சில அவசர நிலை காரணமாக பதற்றத்துடன் இருப்பீர்கள். இருப்பினும் உங்களுடைய செயல்பாடுகளில் நிதானத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிக்க தவறாதீர்கள். இன்று திருமண உறவில் இருப்பவர்கள் நேர்மறையான உரையாடல்கள் உங்கள் மனதிற்கு இதமான நம்பிக்கையையும் தரும். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவது நிதி அழுத்தம் சந்திக்க நேரிடலாம். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் முடிவுகள் இருப்பது மற்றும் முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. பணத்தை சேமிக்கவும், கடன் தொகையை அடைக்க முயற்சி செய்யவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான மற்றும் சிக்கல் உள்ள உறவுகளை கூட இனிமையான பேச்சுவார்த்தைகளால் சரி செய்ய முடியும் உங்களுடைய செலவுகளையும் சேமிப்புகளையும் மதிப்பாய்வு செய்ய வேண்டிய நாள். இன்று நீங்கள் எதிர்பாராத சில நிதி உதவி கிடைக்கும். காதல் தொடர்பாக உங்கள் துணை என் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிதாக காதல் பிறக்க வாய்ப்பு உண்டு. எந்த ஒரு உறவிலும் நிதானமான பேச்சு மற்றும் அணுகுமுறை தேவைப்படும். இன்று ஆரோக்கியத்தில் முதுகு சார்ந்த வலி, பணியிட அழுத்தம் போன்ற விஷயங்களை சமாளிக்க வேண்டியது இருக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலையை தொடங்குவதற்கு முன் சரியான திட்டமிடங்களுடன் செயல்பட்டால் எந்த ஒரு தடையும் ஏற்படாது. பணியிடத்தில் உள்ள விரக்தியை உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். குடும்பத்தின் பொருளாதார நிலையை பராமரிப்பதில் கவனம் செலுத்தவும். இன்று அதிகரித்த செலவுகளால் நிதி அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பட்ஜெட் போட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து செலவுகளை குறைப்பதிலும், குடும்ப பொறுப்புகளை முடிப்பதிலும் ஆலோசித்து செயல்பட உங்களுடைய பதற்றம் குறையும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பான புதிய திட்டங்கள் செயல்படுத்துவது, சொத்து வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் மனதில் வருமானத்தை அதிகரிக்க கூடிய புதிய யோசனைகள் வரும். உங்களுடைய படைப்பு திறன் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். இன்று உங்களுடைய செலவுகளை கூட பயனுள்ள வகையில் மாற்ற முயலவும். முதலீடு அல்லது நிதி இலக்குகளை மனதில் வைத்து செயல்படுவது எதிர்காலத்திற்கு உதவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். காதல் உறவில் இணக்கம் மற்றும் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய குடும்பம் மற்றும் பணியிட சூழலை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயலவும். உங்களுடைய பழைய பணியிடத்தில் மேஜை சுத்தமாக வைத்திருப்பது, கோப்புகளை ஒழுங்கமைப்பது போன்ற விஷயங்கள் உங்கள் கவனச் சிதறலை தடுக்கும். தொழில் தொடர்பாக சில புதிய யோசனைகள் சூழலை மேம்படுத்தும். இன்று உங்களுடைய சிறிய முயற்சிகள் கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. என்ற சந்தை அபாயம் உள்ள இடங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறலாம். உங்கள் துணையுடன் சிறிய பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செலவுகள் அல்லது பொருட்களை வாங்க விஷயத்தில், உங்களுடைய நிதி சூழலை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவும். எந்த ஊரு ஒப்பந்தத்தை பெற அவசரப்படுவதை விட நிதானமான செயல்படுவது சிறந்தது. காதல் உறவில் பிணைப்பு அதிகரிக்கும். தம்பதி இடையே ஆக்கபூர்வமான உரையாடல் நடக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் நேரடியாக ஈடுபடாமல் திரைக்குப் பின்னால் அமைதியாக திட்டம் தீட்டுவது நன்மை தரும். உங்களுடைய வேலை முறையை பகுப்பாய்வு செய்ய வேண்டிய நாள். பணியிட தாமதத்தை திருத்த முயற்சிக்கவும். நீண்ட கால விருப்பங்களை மனதில் வைத்து உங்கள் முதலீடுகளை மதிப்பாய்வு செய்யவும். ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்றுவதை விட பொறுமையுடன் செயல்படவும். காதல் விஷயத்தில் அன்பான உரையாடல் உங்களிடையே நம்பிக்கையை நம்பிக்கையை வலுப்படுத்தும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனதில் உள்ள தன்னம்பிக்கை வேலை தொடர்பாக உந்துதலை அதிகரிக்கும். தொழில் தொடர்பான இலக்குகளை பரிசீலனை செய்யவும், திட்டமிடமும் ஏற்ற நாள். இன்று உங்களுடைய லட்சியத்தை மனதில் வைத்து கவனமாக செயல்படவும். நடைமுறைக்கு ஏற்ற எதார்த்தமான செயல் திட்டங்கள் மனதில் நம்பிக்கையுடன் வைக்க உதவும். புதிய வருமான வாய்ப்புகள், அதற்கான சிந்தனை அதிகரிக்கும். அறிமுகம் இல்லாத இடங்களில் முதலீடு செய்வதில் மிக மிக கவனம் தேவை. இன்றைய யாரையும் கண்மூடித்தனமாக வேண்டாம்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் துணைவியுடன் நேரம் செலவிட, உணவருந்த வாய்ப்பு கிடைக்கும். காதல் அல்லது திருமண வாழ்க்கையில் உங்கள் மனதை இலகுவாக வைப்பதால், உறவின் இனிமையை அனுபவிக்க முடியும். ஆற்றல் நிறைந்தவராக உணர்வீர்கள். வேலை அல்லது தொழில் தொடர்பாக இன்று தனியாக தனியாக செயல்படுவதை விட குழுவாக செயல்பட்டால் வெற்றி அதிகரிக்கும். மன அழுத்தம் தரக்கூடிய விவாதங்களில் அல்லது சூழலில் சிக்காமல் விலகி இருக்கவும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை, தொழில் தொடர்பான புதிய யோசனைகள் முன்னேற்றத்திற்கான ஆதாரமாக மாறும். பணியிடத்தில் சக ஊழியர்கள் நல்லது தொழில் முறை தொடர்புகள் உங்களுக்கு ஊக்கத்தை தரக்கூடிய ஆலோசனையை வழங்குவார்கள். இன்று நம்பிக்கை வரக்கூடிய யோசனைகள், வாய்ப்புகளை எழுதி வைக்கவும். பிறருடைய கருத்தை மதிப்பாய்வு செய்து எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். காதல் உறவில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் . துணை அல்லது நண்பர்களுடன் சுவாரசியமாக நேரத்தை செலவிடுவீர்கள். கால் தொடர்பான காயம், தொந்தரவுகள் ஏற்படலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வரவிருக்கும் நாளில் உங்களுடைய வேலை மற்றும் பொறுப்புக்களை சரியாக முடிப்பதற்கான திட்டமிடுவதற்கு ஏற்ற நாள். தொழில் தொடர்பாக இலக்குகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படவும். உங்களுடைய நிதிநிலை தொடர்பாக, நம்பிக்கை இல்லாத இடத்தில் முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக பட்ஜெட் போட்டு செயல்படவும் .உங்கள் வேலை தொடர்பான அழுத்தம் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவும். தம்பதிய இடையே இதமான உறவு மேம்பட அவர்களுடன் நேரம் செலவிடும் முயற்சிக்கவும்.