பரிதாபமாக பலியான 11 வயதுடைய பிக்கு! தொடரும் விசாரணைகள்
உடுதும்பறை, கைகாவல பகுதியில் அமைந்துள்ள ஹீன்கங்கையில் நீராடச் சென்ற 11 வயதுடைய பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, உடுதும்பறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மினுவாங்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் வசித்து வந்த குறித்த பிக்கு, தானம் வழங்கும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே உடுதும்பறை பகுதிக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

அதன்பின்னர், ஏனைய பிக்குகளுடன் சேர்ந்து ஹீன்கங்கையில் நீராடச் சென்றபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உடுதும்பறை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.