அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : ஜனாதிபதி அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நொச்சியாகமவில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்திற்காக அரசாங்கத்தால் அதிக முதலீடுகளைச் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்
இதேவேளை நேற்று (13) கஹட்டகஸ்திகிலியவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கபிதிகொல்லேவ நீர் விநியோகத் திட்டம் மற்றும் 47 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

மனித - யானை மோதல் விவகாரத்தைக் கையாளுவதற்காக 3,000க்கும் மேற்பட்ட வனவிலங்கு உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 5,000க்கும் மேற்பட்ட வனவிலங்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 5,000 பணியாளர்கள் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைக்கப்படவுள்ளனர்” என தெரிவித்தார்.