இன்றைய ராசி பலன் 12 செப்டம்பர் 2026

இன்றைய ராசி பலன் 12 செப்டம்பர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் நிதானமாகவும் அமைதியாகவும் செயல்பட வேண்டிய நாள். சந்திரன் கன்னி மற்றும் சப்தமஸ்தானத்தில் இருப்பதால் சற்று குழப்பமான சூழல் ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுடைய விருப்பத்திற்கு எதிரான சில செயல்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நண்பர்கள் அல்லது குழுவாக செயல்படும் விஷயத்தில் சிலர் ஒத்துழைப்பு தராத விதத்தில் அல்லது சற்று பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். எதிலும் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்கவும். இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய திட்டமிட்ட செயல்களை செய்து முடிக்க அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள்.இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். இன்று நீங்கள் எடுத்த சில முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய தூண்டலாம். பணம் சார்ந்த விஷயங்களில் அல்லது ஏதேனும் பொருள் வாங்கும் விசயத்தில் ஆச்சரியமான சில விஷயங்கள் நடக்கலாம். இன்று பணத்தை கையாள்வது மற்றும் வேலைகளை திட்டமிடுவது போன்ற விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நன்மை தரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று விளையாட்டு, பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் பிறருடன் சேர்ந்து செயல்படுவோம் மகிழவும் வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் வழக்கத்திற்கு மாறான சில செயல்களை செய்வீர்கள். அதன் மூலம் உங்களுடைய படைப்பாற்றல் வெளிப்படும். சிலருடைய நல்ல யோசனைகள், திறமைகள் மூலம் அனுபவம் கிடைக்கும். அதே சமயம் ஆர்வக்கோளாறாக அதீத செய்திகள் செய்வதை தவிர்க்கவும். இது விபத்துக்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. சமூக நிகழ்வுகள் தொடர்பான திட்டங்கள் மாற வாய்ப்பு உண்டு.
 

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் கனிவாக நடந்து கொள்ளவும். பிறரிடம் பேசுவதில் நிதானம் தேவைப்படும். மேலும் பிறர் கூற கூடிய கருத்துக்களை கவனமாக ஆலோசிப்பது நல்லது. இன்று குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில இடர்பாடுகளை சந்திக்க நேரிடலாம். வீட்டுக்கு உபயோகப் பொருட்கள் பழுதடைய வாய்ப்பு உண்டு. இதனால் நீங்கள் எதிர்பாராத செலவுகள் சந்திப்பீர்கள். இன்று சில எதிர்பாராத நபர் அல்லது உறவினர் வீட்டிற்கு வரலாம். குருவின் அருளால் சிந்தனையுடன் செய்யக்கூடிய எந்த செயலிலும் எதிர்பார்த்தது ஒரு நல்ல வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு புதிய ஆற்றலும், உற்சாகம் தரக்கூடிய யோசனைகளும் நிறைந்திருக்கும். புதிய இடங்களை கண்டு மகிழ, புதிய நபர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவது அல்லது தெளிவற்ற யோசனையுடன் செயல்படுவதை தவிர்ப்பது அவசியம். இதில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு உங்கள் மீதான மரியாதையை குறைக்கும். சர்ச்சை கூறிய விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும். இந்த குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்குவது உங்கள் உற்சாகத்தை மேம்படுத்தும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணம் வரவு மற்றும் வருமானம் போன்ற விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகள், பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்று சற்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். அதனால் பெரிய முதலீடு அல்லது ஒப்பந்தங்கள் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளை தேடுவீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி உங்கள் ஸ்தானத்தில் இருப்பதால் பல விதத்தில் நன்மைகள் பெறுவீர்கள். சில சவாலான சூழலை எதிர்கொண்டாலும், அதை சமாளிக்க கூடிய மனநிலையும், திறமையுடன் செயல்படுவீர்கள். இன்று உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம். இருப்பினும் இது போன்ற விஷயங்கள் உங்களுக்கு பிடித்தமான விஷயத்தமான அல்லது சுவாரஸ்யமான சூழலை தரும். இன்று கட்டுப்பாடான செயல்பாடு மற்றும் நிதானம் முடிவுகள் எடுப்பதில் கவனம் செலுத்தவும்.
 

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய ஆடை அணிகலன் வாங்குவதில் ஆர்வம் காட்டியவர்கள். இன்று பிறருடைய தூண்டுதலால் அல்லது அவசரத்தால் எந்த ஒரு முடிவு எடுக்க வேண்டாம். இன்று எந்த ஒரு ஆவணங்கள் மற்றும் முக்கிய பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். இன்று மற்றவர்களுடன் இணக்கமாக பழகுவதிலும், உங்கள் பணிகளை முடிப்பதிலும் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். சில குழப்பமான மனநிலை இருந்தாலும் உங்களுடைய நிதானமான செயல்பாடு சூழலை சமாளிக்க உதவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். காதல் விஷயத்தில் இனிய பேச்சு தேவைப்படும்.
 

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மற்றவர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்களால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். ஒரு பெண் அல்லது புதிதாக அறிமுகமானவர்களால் சில ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். இன்று நடக்கக்கூடிய நிகழ்வுகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். வழக்கத்திற்கு மாறான அல்லது விதிமுறைக்கு மாறாக இன்று செயலையும் செய்ய வேண்டாம். உங்கள் மனதில் அதிக ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். இது இன்று நிலவக்கூடிய சவாலான சூழ்நிலையை சமாளிக்க உதவும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பிறருடைய கவனத்தை ஈர்ப்பதில் அதிக ஈடுபாடு காட்டியவர்கள். சில விஷயங்களை பிறரிடம் முன்வைப்பதில் ஆர்வம் காட்டிவீர்கள். சில முக்கிய வேலை தொடர்பாக அவசரமாக பணிகளே செய்ய வேண்டியது இருக்கும். இன்று குடும்பத்தில் உங்களுடைய கருத்துக்கள் சற்று தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு உண்டு. அதனால் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசவும். இன்று கூச்சலிடுவதை விட மென்மையான பேச்சை கடைபிடிப்பது நல்லது.காதல் விஷயத்தில் துணையின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளவும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலை அல்லது கல்வி தொடர்பான பயணத் திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு விருப்பமான இடங்களுக்கு செல்வது அல்லது செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல் தொடர்பாக உங்களுடைய சாதாரண யோசனைகள், மேலிடத்தை கவர கூடும். உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த சரியான அளவு உடலுக்கு ஓய்வு கொடுப்பது, தூங்குவது நன்மை தரும் .
 

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று பணம் அல்லது சொத்து பிரிப்பதிலோ அல்லது பகிர்வதிலோ அவசரப்பட வேண்டாம். பெரிய அளவிலான பணத்தை கையாளுவதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். மேலும் சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவும். சில விஷயங்கள் இன்று உங்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. வேலை தொடர்பாக அலைச்சல் நிறைந்ததாக இருக்கும். வேலை சற்று மன அமைதியை குறைக்க வாய்ப்பு உண்டு. காதல் விஷயத்திற்காக நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள்.