இன்றைய ராசி பலன் 25 அக்டோபர் 2026

இன்றைய ராசி பலன் 25 அக்டோபர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உங்களுடைய மனம் மகிழ்ச்சியை நிறைந்திருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். முக்கிய வேலைகளை முடிப்பதில் அல்லது முடிவுகள் எடுப்பதில் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்களுடைய நிதிநிலை ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருக்கும். வியாபாரம் நல்ல விதத்தில் நடக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சூழ்நிலையை உணர்ந்து செயல்படவும். உங்களுடைய மேலதிகாரிகளுடன் நல்ல உறவை பேணுவோம். சிலருக்கு பதவி உயர்வு தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கக்கூடியதாக இருக்கும். அலைச்சலால் சோர்வு ஏற்படக்கூடிய நாள். வெளியூர் பயணங்கள் செய்யும்போது கவனமாக இருக்கவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுடைய வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தினரிடமிருந்து மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று மனதளவில் தன்னம்பிக்கையுடன் உணர்வீர்கள். உங்கள் செயல்பாடுகளில் பொறுமையை கடைப்பிடிப்பது வெற்றியை பெற்று தரும். புதிய வண்டி வாகனம், நிலம் போன்ற சொத்து வாங்குவதற்கான நிதி ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று முக்கியமான பணிகளை தள்ளி போடாமல் திட்டமிட்டு செய்து முடிக்கவும். முதலீடு, கடன் குடிப்பது போன்ற நிதி தொடர்பான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுடைய வருமானம் அதிகரிக்க கூடிய நாள். வேலை, தொழில் நிமித்தமான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இன்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பூர்விக சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன உளைச்சல், சோர்வு ஏற்படக்கூடிய நாள். தன்னம்பிக்கை குறைந்ததாக உணர்வீர்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு குறைவாகவே கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆன்மீக தலங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல் நலம் தொந்தரவு தர வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற பயம், பதற்றம் ஏற்படலாம். திட்டமிடாத வேலைகளால் உங்களுக்கு சிரமங்கள் சந்திக்க நேரிடும். எந்தவித விவாதங்களிலும் ஈடுபட வேண்டாம். அமைதி காப்பது நன்மை தரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய இனிய பேச்சு சூழலை சாதகமாக மாற்றும். மனதில் சற்று குழப்பங்கள் நிறைந்திருக்கும். உங்களுடைய தந்தை மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தையும் கவனம் செலுத்தவும். தொழில் செய்யக்கூடியவர்களுக்கு அதை மேம்படுத்த, விரிவு படுத்துவதற்காக எடுக்கக் கூடிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். அதனால் எந்த ஒரு செயலிலும் திட்டமிடல் அவசியப்படும். உங்களுக்கு சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த செயலையும் மிகுந்த நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருந்தாலும், சுய கட்டுப்பாடு மிகவும் தேவைப்படக்கூடிய நாள். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று நண்பர்களை சந்திக்கவும் அவர்களிடம் இருந்து ஆதரவும் கிடைக்கும். பழைய நிதி திட்டமிடல் இன்று உங்களுக்கு லாபத்தை தரலாம். பணம் சேமிப்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். நல்ல விஷயங்கள் நடக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு விருப்பமான செயல்களை செய்ய ஆசைப்படுவீர்கள். தொழில்நுட்பம், அறிவு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தை உயர்த்துவதற்கான புதிய வழிகள் பிறக்கும். வேலை, தொழிலை மாற்றுவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இன்று உன்னுடைய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களுடைய நேர்மையான பேச்சால் காரியங்கள் சாதிக்க முடியும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனநிலையில் மாற்றங்கள் உண்டாகும். தொழில், வேலை தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும். வேலையில் உங்களுடைய ஆலோசனை மேலதிகாரிகளிடம் இருந்து ஆதரவு அதிகரிக்கும். கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். அதே உங்களுடைய முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய கடின உழைப்பிற்கான பாராட்டும், அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று தன வரவு அதிகரிக்க கூடிய நாள். புதிய வழிகளில் வருமானத்தை உயர்த்தும் முயற்சி செய்வீர்கள். சில விஷயங்கள் குறித்து அதிகமாக சிந்திப்பீர்கள். இன்று உங்களுடைய தன்னம்பிக்கை சற்று குறைய வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகள், பெரியவர்களின் உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று தேவையற்ற மன அழுத்தத்தையும், செலவுகளையும் தவிர்ப்பது நன்மை தரும். நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட வேண்டிய நாள். மாணவர்களின் செயல்பாடு நல்ல விதத்தில் இருக்கும்.
 

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். அதனால் நிதானமாகவும், திட்டமிட்ட செயல்பாடும் இன்று உங்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும். குடும்பத்தில் அமைதியான சூழலை பேணவும். வேலை தொடர்பாக கூடுதல் பொறுப்புக்களை சுமக்க நேரிடலாம். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் உதவும். வேலை தொடர்பாக அல்லது குடும்பத்தினருடன் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு. நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் மகிழ்ச்சியையும், அனுகூல பலனை தரும். மனதில் குழப்பங்கள் இருக்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.
 

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சங்கடமான சூழ்நிலை இருக்கும். பேச்சில் நிதானத்தையும், செயலில் தெளிவையும் கடைபிடிக்கவும். வேலை தொடர்பாக முன்னேற்றமான பாதை அமையும். உயரதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கலாம். காதலி அல்லது திருமண வாழ்க்கையில் துணையிடமிருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் சாதகமான பலனைத் தரும். இன்று தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். வண்டி, வாகனத்தை பயன்படுத்துபவர்கள் நிதானமாகவும், மெதுவாகவும் செல்வது நன்மை தரும்.