உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது
2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
குறித்த விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான பதிவுகளை 2026 செப்டெம்பர் 17ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk-ஐ பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.