ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 பேர் : பிரதமர் அறிவிப்பு

ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 பேர் : பிரதமர் அறிவிப்பு

நாட்டிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (08) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

 

 டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

அத்துடன் பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 பேர் : பிரதமர் அறிவிப்பு | Recruitment Of 23 000 Teachers In Sl Pm Harini

மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.