ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்- உதயநிதி ஸ்டாலின்

ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்- உதயநிதி ஸ்டாலின்

பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.

தமிழ்நாடு சட்டசபையில்  பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* சட்டசபையில், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார். 

* தற்போது திமுக ஆட்சி நடைபெறவில்லை, தவெக ஆட்சி நடைபெறுவதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

* முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை.

* முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம். 

* பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.

* திங்கள்கிழமை பதிலளிப்பதாக சொல்லி கடந்த வியாழக்கிழமை ஓடிவிட்டார் முதலமைச்சர் விஜய்.

* மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை ஒப்புவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

* பஞ்ச் டயலாக் என ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.

* தி.மு.க.வினர் மீது வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் நாங்களும் கூறுகிறோம். 

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.