ஸ்ரீலங்காவில் சூம் தொழில்நுட்பத்தினால் ஏற்படவுள்ள ஆபத்து!

ஸ்ரீலங்காவில் சூம் தொழில்நுட்பத்தினால் ஏற்படவுள்ள ஆபத்து!

நவீன சூம் தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் ஊடாக தகவல்களை திருடுவதற்காக இரு வாய்ப்புக்கள் காணப்படுவதாக சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் கொரோனா அச்சத்தால் வீட்டிலிருந்தவாறே வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் பெருமளவான முன்னணி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என்பன தமது கூட்டங்களையும் கல்வி நடவடிக்கைகளையும் இதனூடாகவே நடத்துகின்றன.

இதுகுறித்து ஸ்ரீலங்கா கணினி விவகார அவசர ஆயத்தக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தொடர்பாடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு பயன்படும் நவீன சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக அதனை பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த சூம் முறைமையின் பயனர்கள் தமது கலந்துரையாடல்களின் போது காணொளிகளை பரிமாற அனுமதிக்கப்படுகின்றது. இதனுடாகத் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

சூம் செயலியை பயன்படுத்துவதற்காக இரகசிய இலக்கத்தை கலந்துரையாடல்களில் பரிமாறுவதன் மூலமும் தகவல்கள் களவாடப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

இதனூடாக மிகவும் இரகசியமான தகவல்கள் கூட தொடர்பற்ற மூன்றாம் தரப்பினருக்கு செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.