ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில் நீரிணையை கடந்த 40 வணிக கப்பல்கள்

ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில் நீரிணையை கடந்த 40 வணிக கப்பல்கள்

அமெரிக்க இராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடக்க 40 வணிக கப்பல்களுக்கு உதவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்க படைகள் ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள 60 ஈரான் இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

18 மில்லியன் Litre எண்ணெய்

இதன்படி அமெரிக்க படைகள் நேற்று, ஈரானின் தாக்குதல்களில் இருந்து மேற்படி கப்பல்களை பாதுகாத்த நிலையில் அந்த கப்பல்களில் மொத்தம் 18 மில்லியன் Litre பேரல் எண்ணெய் இருந்ததாக கூறப்படுகிறது.

ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சாதனை! ஒரே நாளில் நீரிணையை கடந்த 40 வணிக கப்பல்கள் | Us Record 40 Ships Aided In Hormuz In One Day

 

இந்த பாதுகாப்பு திட்டத்திற்காக அமேரிக்கா, தன்வசம் உள்ள விண்வெளி செயற்கைகோள் தரவுகளையும் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஈரான் துறைமுகங்களின் செயல்பாடுகளை தடுக்கும் விதமாக அமெரிக்க இராணுவம் கடல் முற்றுகையிலும் ஈடுபட்டுள்ளதாக கூப்படுகிறது.

அமெரிக்காவின் செயல்களுக்கு பதிலடியாக அதன் ஆதரவு வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் முன்னெடுத்துள்ளது.

நேற்று ஈரான் வான்பரப்பில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தங்கள் ஏவுகணை அமைப்பு தடுத்து அழித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.