பெண்ணின் ஆடையற்ற புகைப்படங்களை பரப்பியதாக சந்தேக நபர் கைது

பெண்ணின் ஆடையற்ற புகைப்படங்களை பரப்பியதாக சந்தேக நபர் கைது

பெண்ணொருவரின் ஆடையற்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஆனமடுவ காவல்துறை பிரிவுக்குட்பட்டவர் என காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 

இதற்கமைய, வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் நேற்று (13.08.2026) காலை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பெண்ணின் ஆடையற்ற புகைப்படங்களை பரப்பியதாக சந்தேக நபர் கைது | Suspect Arrested Dissemination Woman Nude Photos

 

கைது செய்யப்பட்டவர் மாம்புரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் எவ்வாறு பெறப்பட்டன, அவை எந்த நோக்கத்திற்காகவும் எவ்வாறு பரப்பப்பட்டன என்பது உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.