மீண்டும் பரபரப்பு! ஈரானிய எண்ணெய்க்கான உரிமத்தை ரத்து செய்தது அமெரிக்கா
ஈரானிய எண்ணெய் விற்பனைக்கு அங்கீகாரம் அளித்திருந்த பொது உரிமத்தை அமெரிக்க திறைசேரி ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், “2026 ஜூலை 7 முதல், 2026 ஜூன் 21 திகதியிட்ட பொது உரிமம் X ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக பொது உரிமம் X1 முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாள் தடை விலக்கு
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை அமெரிக்கா பகுதியளவு நீக்கியிருந்தது.

அதைத்தொடர்ந்து, அமெரிக்க திறைசேரி கடந்த ஜூன் மாதம் 60 நாள் தடை விலக்கை வழங்கியிருந்தது.இது, ஈரானிய எண்ணெயை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும் மற்றும் அமெரிக்காவிற்கு விற்கவும் வழிவகுத்திருந்தது.
அமெரிக்கவின் எச்சரிக்கை
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் நடவடிக்கைகள், அமெரிக்காவிற்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இதற்கான விளைவுகளை அவர்கள் எதிர்நோக்க நேரிடும் என்று அமெரிக்க தரப்பு எச்சரித்துள்ளது.

இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.