கிருஷ்ண அவதார மகிமை

கிருஷ்ண அவதார மகிமை

கா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், மிகவும் சிறப்பு வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததுமாக கருதப்படுவது, கிருஷ்ண அவதாரம்.

மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், மிகவும் சிறப்பு வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததுமாக கருதப்படுவது, கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரத்தில்தான் நமக்கு மகாபாரதம் என்னும் பெரும் பொக்கிஷம் கிடைத்தது. கீதை என்னும் மிகப்பெரும் வேதம் கிடைத்தது. கிருஷ்ணரைப் பற்றி சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம், கிருஷ்ணா அவதாரம் ஆகும்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில், உறியடி விழா என்பது மிகவும் விசேஷமானது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் உள்பட ஏராளமான பெயர்கள் உள்ளன.

கிருஷ்ணர் தன்னுடைய சிறுவயதில் கோகுலத்தில் வாழ்ந்தார். இதனால் அவர் அவதரித்த நாளை, ‘கோகுலாஷ்டமி’ என்றும் சொல்வார்கள்.

கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாதச் சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்குள் வருவதாக ஐதீகம்.

கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7-ம் வயதில் கோபியர்களுடனும், 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7 தான்.

கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர்-சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும்.

பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ் தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.

கோகுலத்து மக்கள் மீது இந்திரன் இடி-மின்னல்களை ஏவி விட்டு பெருமழை வெள்ளத்தை உண் டாக்கினான். அதனால் அந்த மக்கள் அனைவரும் துன்பத்தில் தவித்த போது கிருஷ்ணர் கோவர்த்தன கிரி என்ற மலையை சுண்டு விரலில் தூக்கி குடைபோல் பிடித்தார். அதன் கீழ் அந்த பகுதி மக்களும், ஆடு-மாடு போன்ற விலங்கினங்களும் அடைக்கலம் புகுந்து மழை வெள்ளத்தில் இருந்து தப்பின.