ஹோர்முஸ் நீரிணை திறக்கும் என ட்ரம்ப் கூறியதை ஈரான் மறுப்பு.
ஈரானுடன் எட்டப்படவிருக்கும் ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வழிவகுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரூத் தளத்தில் கூறியுள்ள நிலையில் இந்தக் கூற்றை ஈரான் நிராகரித்துள்ளது. டிரம்பின் கூற்று "உண்மைக்கு முரணானது" என்றும் ஈரானின் IRGC உடன் தொடர்புடைய பார்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது
திறக்க ஒரு சாத்தியமான உடன்பாடு எட்டப்பட்டால், நீர்வழியின் மேலாண்மை, பயணப் பாதை, நேரம், கடந்து செல்லும் முறை ஆகியவற்றைத் தீர்மானிப்பது மற்றும் அனுமதிகளை வழங்குவது ஆகியவை ஈரான் இஸ்லாமியக் குடியரசின் IRGC முழுமையான கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அணு தொடர்பில் பேசப்படவில்லை.
ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்லது அதன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை; இந்த விவகாரங்கள் பின்னர் விவாதிக்கப்பட வேண்டும் என தெஹ்ரான் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது போரை முடிவுக்கு கொண்டு வருவது, அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நிறுத்துவது, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல் குறித்தே பேசப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.