15 வருடங்களுக்குப் பின் ஜனாதிபதி கிண்ணத்தை முத்தமிட்டது கண்டி திரித்துவக் கல்லூரி!

15 வருடங்களுக்குப் பின் ஜனாதிபதி கிண்ணத்தை முத்தமிட்டது கண்டி திரித்துவக் கல்லூரி!

2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி கிண்ண அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி தொடரின் சாம்பியன் பட்டத்தை கண்டி திரித்துவக் கல்லூரி அணி இன்று (04) கைப்பற்றியது. 

 

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கொழும்பு  றோயல் கல்லூரி அணியை 58 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி திரித்துவக் கல்லூரி அணி இந்த வெற்றியைப் பதிவு செய்தது.

 

2011ஆம் ஆண்டிற்குப் பிறகு திரித்துவக் கல்லூரி அணி ஜனாதிபதி கிண்ணத்தை வென்றெடுத்த முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.