ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி நியமனம்

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி நியமனம்

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் (ETRA) வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக துரைராசா கஷேந்திரனை நியமித்துள்ளதாக ஈழ தமிழர் பெருமன்றம் அறிவித்துள்ளது.

அது வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட பட்டுள்ளது.

ஈழத்தமிழர் தாயகத்தில் நீண்டகாலமாக செயற்பட்டுவந்த ஊடகவியலாளரும், குடிசார் சமூக செயற்பாட்டாளரும், ஆசிரியருமான துரைராசா கஷேந்திரன் ETRA வின் வட அமெரிக்கத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதைக் கனடா, அமெரிக்கா வாழ் ஈழத்தமிழர்களுக்கும் அவர்களது அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் அறியத்தருகிறோம்.

ஊடகவியலாளராகக் கடமையாற்றிய

யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாயைச் சேர்ந்தவர். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பை வாழ்விடமாகக் கொண்டவர். 2023ஆம் ஆண்டில் இருந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார்.

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் வட அமெரிக்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி நியமனம் | Appointment Representative For North America Etra

யாழ்ப்பாணத்தில் இயங்கிய அமைதிக்கும் நல்லிணக்கத்துக்குமான நிலையம் நடாத்திவந்த மனித உரிமைகள் சான்றிதழ்க் கற்கையைப் பூர்த்திசெய்த பின்னர், கணினித் தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவத் துறையில் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்திசெய்து, தமிழ்த் தேசியப் பரப்பில் பிரபலமாயிருந்த சில தமிழ் ஊடகங்களுக்கும் வெளிநாட்டு ஆங்கில ஊடகங்கள் சிலவற்றுக்கும் ஊடகவியலாளராகக் கடமையாற்றினார்.

இவர், யாழ் பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் கல்வியியல் துறையில் தனது கற்கையைத் தொடர்ந்தவண்ணம் தீபகற்பத்திலும், வன்னிப் பெருநிலத்திலும், ஈழத் தமிழர் தேசியம் சார்ந்த குடிசார் சமூக செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார்.

2026 திருகோணமலைப் பிரகடனம் இறுதிப்படுத்தப்பட முன்னதாக வட அமெரிக்காவில் வாழும் ஈழத்தமிழர்களும், அவர்களது நட்புறவுகளும், தமது கருத்துக்களை ETRA வட அமெரிக்க வதிவிடப்பிரதிநிதி ஊடாக உங்கள் அனைவருக்குமான தாயகக் குடிசார் நிறுவனமாகக் கட்டமைக்கப்பபட்டுவரும் ETRA நிறுவனத்துக்கு அறியத்தருமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.