கத்தோலிக்க பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள செய்தி..!

கத்தோலிக்க பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள செய்தி..!

அரசாங்கம் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முறையில் கத்தோலிக்க பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கத்தோலிக்க கல்வி பணிப்பாளர் ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி நான்கு கட்டங்களின் அடிப்படையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.