ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் நாளை முதல் இடைநிறுத்தம்
நாளை (27.03.2026) முதல் மறு அறிவித்தல் வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொது மக்கள் சேவையினையும் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (26.03.2026) பிற்பகல் 1.30 மணியளவில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பும் வரை அனைத்துச் சேவைகளும் இடம்பெறாது என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.