சர்வதேச சந்தையில் மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றுடன் (25) ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாகச் சிறிதளவு உயர்ந்துள்ளதுடன், இது 1% அதிகரிப்பு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.3 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.10% உயர்வாகும்.
அதேவேளை, மர்பன் (Murban) வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.4 டொலர்களாகக் காணப்படுகிறது. இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 14.52% வீழ்ச்சி என அந்த அறிக்கைகள் மேலும் குறிப்பிடுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தத் தீர்மானித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் குறைந்திருந்தன.
இருப்பினும், தற்போது மத்திய கிழக்கு போர் தொடர்பான நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன.