புதிய அமைச்சரவை தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு

புதிய அமைச்சரவை தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு

ஸ்ரீலங்காவில் புதிய அமைச்சரவை எதிர்வரும் புதன் கிழமை புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.

அந்த வகையில் புதிய அமைச்சரவை கட்டமைப்பில் 28 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் விடயதானங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழிநடத்தப்படும் அமைச்சுக்களும் அடங்குகின்றன என கூறப்பட்டுள்ளது.