
தனிப்பட்ட குரோதம் காரணமாக கொடூரமாக ஒருவர் வெட்டிக்கொலை!
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூவரசன் தீவு பிரதேசத்தில் தனிப்பட்ட குரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் அப்துல் மனாப் முகமட் சபான் வயது 26 என அடையாளம் காணப்பட்டுதுடன் அவர் சூரங்கல், கிண்ணியா-5 பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை சம்பந்தமான விசாரணையில் இரு சகோதரர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சகோதரர்கள் 22, 20 வயதுடைய கிண்ணியா-5 பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை பதில் நீதவான் முன்னிலை ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.