நீர் இன்றி வாடும் நவத்தேகம மக்கள்
நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள புத்தி ஆசிரி கிராமத்தில் சுமார் 20 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த பலர் விவசாயத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வாழும் இந்த கிராம மக்களுக்கு நீரின்மை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
நீர் வழங்குவதற்காக சமூக அடிப்படையிலான நீர்வழங்கல் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டாலும் அதில் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்