கடவுச்சீட்டு விநியோக சேவை பாதிப்பு : வெளியான அறிவிப்பு
இலங்கையில் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் இவ்வாறு பாதிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் மின்னஞ்சல் முகவரி என்று பொய்யாகக் கூறி வெளியிடப்படும் ஒரு மோசடி மின்னஞ்சல் குறித்து இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த மின்னஞ்சல்கள் தமது திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்பதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.