நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல்

நாடளாவிய ரீதியில் 3,000 இற்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் பத்திற்கும் குறைவான ஆசிரியர்களே பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் 2025 ஆம் ஆண்டிற்கான தரவுகள் இதனை சுட்டிக்காட்டுகின்றன.

இதனடிப்படையில், நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளன.

இந்தப் பாடசாலைகளில் 3,065 பாடசாலைகளில் பத்திற்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல் | Teacher Shortage Sri Lanka Schools Census Data

இவ்வாறு ஆசிரியர்கள் குறைவாக உள்ள பாடசாலைகளில் ஒரு தேசிய பாடசாலையும் உள்ளடங்குகின்றது.

அத்தோடு, நாட்டின் 1,645 அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாக உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில், 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒரு தேசிய பாடசாலையும் 1,644 மாகாண பாடசாலைகளும் அடங்குகின்றது.

மாணவர்களின் எண்ணிக்கை 51இற்கும் 100 இற்கும் இடைப்பட்ட அளவில் 1,648 அரச பாடசாலைகள் உள்ளன, இவை அனைத்தும் மாகாண பாடசாலைகளாகும்.

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை: வெளியான தகவல் | Teacher Shortage Sri Lanka Schools Census Data

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு 266,281 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.