3000 அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி! வெளியான அதிர்ச்சித் தகவல்

3000 அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி! வெளியான அதிர்ச்சித் தகவல்

சுமார் மூவாயிரம் அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அரச பாடசாலை கட்டமைப்பில் இயங்கி வரும் சுமார் மூவாயிரம் அரச பாடசாலைகளை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய ஆசிரியர் அமைப்பின் பொதுச் செயலாளர் சதுன் பண்டார போதாரகம தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு மற்றும் பாட விதான மாற்றங்கள் தொடர்பில் சமூகத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இந்த நிலைமையை தனக்கு சாதமாக பயன்படுத்தி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

3000 அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி! வெளியான அதிர்ச்சித் தகவல் | Govt Trying To Sell 3000 Schools To Private Sector

இந்த நிலைமை குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தின் இந்த இரகசிய நோக்கம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் சதுன் பண்டார போதாரகம வலியுறுத்தியுள்ளார்.