ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை இராணுவத்தின் 9158 ஏனைய தரநிலை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் கௌரவத்தை மேம்படுத்தும் வகையிலும், இராணுவத்தினரின் நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
