இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தன்னார்வ ஊதியம்: வெளியான அறிவிப்பு

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தன்னார்வ ஊதியம்: வெளியான அறிவிப்பு

தன்னார்வ ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மின்சார சபை உருமாற்றப் பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஹேடிகல்ல தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கை மின்சார சபையின் மொத்தம் 2,173 ஊழியர்கள் தன்னார்வ ஓய்வுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 20 பேர் தமது விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 2,153 ஊழியர்களுக்குத் தன்னார்வ ஓய்வு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தன்னார்வ ஊதியம்: வெளியான அறிவிப்பு | Ceb Voluntary Retirement Allowance Announcement

மேலும், இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.