நாட்டில் உச்சம் தொடும் மரக்கறி விலைகள்
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதால் காய்கறிகளின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.
இதனால் மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்..
பொருளாதார மத்திய நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் சந்தை நிலவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, தம்புள்ளை மற்றும் கெப்பெட்டிபொலவில் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோகிராம், நுவரெலியாவில் 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கறிமிளகாய் ஒரு கிலோகிராம் நுவரெலியாவிலும் கெப்பெட்டிபொலவிலும் 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிறையில், தம்புள்ளையில் 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பச்சை மிளகாய் ஒரு கிலோ, கெப்பெட்டிபொலவில், 650 ரூபாய் முதல் 900 ரூபாய் வரைக்கும், தம்புள்ளையில், 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.