மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 331 பேர் கைது

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 331 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 331 கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த 122 பேர் குறித்த குழுவில் உள்ளடங்குவதோடு, சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 94 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அலுவலகம் தெரிவித்துள்ளது.