அவதானமாக இருங்கள்! யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை
நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் இருப்பதால் அப்பகுதி மக்கள், தயாராக இருக்குமாறு நீர்ப்பாசனத் துறை முன்கூட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (07.01.2026) இரவு 11 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வானிலை ஆய்வு மையம் வழங்கிய முன்னறிவிப்புகளின்படி, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளிலும் ஆறுகளுக்கு அருகிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் துறையும் அறிவித்துள்ளது.