
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர அநுர மஞ்சநாயக்க பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிகமுவ – பொயகொட பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 14 ரவைகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவரது வீட்டை சோதனையிட்டபோது, நிலத்தை அகழும் அதிநவீன இயந்திரங்கள் இரண்டும் கைப்பற்றப்படத்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.