
கடற்படையினரை திருப்பி அனுப்புவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கம்
இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு கடற்படையினரை திருப்பி அனுப்பும் செயற்பாட்டுக்காக எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் சிறப்பு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
அதற்கமைய முதல் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் 13 வெளிநாட்டு கடற்படையினருடன் நேற்று மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அதேநேரம் எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமானம் இன்று (திங்கட்கிழமை) 14 பிலிப்பனைன்ஸ் கடற்படையினருடன் இங்கிருந்து பிற்பகல் 2.15 மணியளவில் பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணிக்கவுள்ளது.
உலகளாவிய ரீதியில் கடற்படையினரை இடமாற்றுவதற்கு ஏதுவாக இலங்கை அமைந்துள்ளமையினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.