பொரல்லையில் மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்
பொரல்லை - சஹஸ்புர பகுதியில் கவனக்குறைவாக செலுத்திச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நபர் தப்பிச்சென்ற நிலையில் வெயங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபரிடம் இருந்து கிட்டத்தட்ட 2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.