17 வயது காதலி உயிரிழப்பு; 18 வயது காதலன் கைது

17 வயது காதலி உயிரிழப்பு; 18 வயது காதலன் கைது

கிங் ஓயாவில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவியின் காதலன் வென்னப்புவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜா - எல, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் டிசம்பர் 28 ஆம் திகதி மாலை காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வென்னப்புவை பிரதேசத்திற்கு வரழைத்து காதலன் கண் முன்பு கிங் ஓயாவில் குதித்து காணாமல்போயுள்ள நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

17 வயது காதலி உயிரிழப்பு; 18 வயது காதலன் கைது | King Oya Girl Dies 18 Year Old Boyfriend Arrestedமாணவியை காப்பாற்ற முயன்று கிங் ஓயாவில் குதித்த காதலனும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன பாடசாலை மாணவி (29) மாலை சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஜா - எல, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயதுடைய காதலன் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பிய பின்னர் வென்னப்புவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.