நாளை பாடசாலைகள் திறக்கப்படும் நிலையில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்!

நாளை பாடசாலைகள் திறக்கப்படும் நிலையில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்!

அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளும் நாளையதினம் ஆரம்பமாகின்றன. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

புதிய அட்டவணையின்படி ஐந்தாம், 10ஆம், 11ஆம் மற்றும் 13ஆம் வகுப்புக்களின் மாணவர்கள் வாரத்தின் ஐந்து நாட்களும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

முதலாம் இரண்டாம், 3ஆம் வகுப்பு மாணவர்கள் வாரத்தில் ஒருநாள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதேவேளை 200 மாணவர்களும் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களும் நாளை ஆரம்பிக்கப்படுகின்றன.

200 மாணவர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட ஆரம்பப் பாடசாலைகளில் முதலாம் வகுப்பும் 5ஆம் வகுப்பும் திங்கட்கிழமைகளில் திறக்கப்படும்.

2ஆம் வகுப்பும் 5ஆம் வகுப்புக்கும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்படும் 3ஆம் ஐந்தாம் வகுப்புக்கள் புதன்கிழமைகளில் திறக்கப்படும்.

4ஆம் ஆம் வகுப்புக்கள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் திறந்திருக்கும் 200 மாணவர்களுக்கும் அதிகமான வகுப்புக்களைக் கொண்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளில் 6, 10, 12, 13ஆம் வகுப்புக்கள் திங்கட்கிழமைகளில் திறக்கப்படும்.

7ஆம் 10ஆம் 11ஆம் 12ஆம் 13ஆம் வகுப்;புக்கள் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்படும். 8ஆம் 10ஆம் 11ஆம் 12ஆம் 13ஆம் வகுப்புக்கள் புதன்கிழமைகளிலும் திறக்கப்படும். 9ஆம் 10ஆம் 11ஆம் 12ஆம் 13ஆம் வகுப்புக்கள் வியாழக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் திறக்கப்படும்.

இருப்பினும் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புக்களுக்காக பாடசாலைகள் காலை 7மணியில் இருந்து பிற்பகல் 1.30வரை திறக்கப்படும். 10,11, 12, 13ஆம் வகுப்புக்களுக்கான பாடசாலைகள் காலை 7.30க்கு திறக்கப்பட்டு பிற்பகல் 3.30க்கு மூடப்படும்.

இதேவேளை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை திறக்கவேண்டாம் என்று பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.