பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

கோவை அடுத்த கணபதியைச் சேர்ந்த ஜீவா (25) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அவரது வீட்டின் அருகே வசித்த பெண் ஒருவர் குளிப்பதை ஜீவா வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் உறவினர்கள் ஜீவாவை சரமாரியாக தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜீவாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம் | Murder Committed After Filming A Woman Bathing

அங்கு காயங்களுக்கு காரணம் குறித்து மருத்துவர்கள் மற்றும் பொலிஸார் கேட்டபோது, ஜீவா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போக்குவரத்து பொலிஸார் நடத்திய விசாரணையிலும், பைக்கில் இருந்து கீழே விழுந்ததே காயங்களுக்கு காரணம் என்றும், மேலதிக நடவடிக்கை தேவையில்லை என்றும் ஜீவா எழுதி கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி ஜீவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பின்னர் ஜீவாவின் அண்ணன் தனிப்பட்ட முறையில் விசாரித்தபோது, பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால்தான் ஜீவா உயிரிழந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம் | Murder Committed After Filming A Woman Bathing

அந்த மனுவில், ஜீவாவின் வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால்தான் தனது சகோதரன் இறந்ததாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சம்பவம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால், வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

அதன் பேரில், சரவணம்பட்டி பொலிஸார் வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த வாலிபரின் வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.