சொந்த மகனுக்கு தாய் செய்த பகீர் சம்பவம் ; காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி
மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பணம் வந்தால் மது குடிக்கலாம் என்ற ஆசையில் லெட்சுமி தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார்.
பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தையை 2 பெண்கள் உதவியுடன் புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியருக்கு இந்திய மதிப்பில் ரூ.2.4 இலட்சத்திற்கு விற்றுள்ளார்.
எனினும் அந்த பெண்ணின் கணவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குழந்தையை பத்திரமாக மீட்டு, தாய் உட்பட விலைக்கு வாங்கிய தரப்பினரை அம்மாநில பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகின்றன.