15 ஆண்டுகளுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்

15 ஆண்டுகளுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் ரஜினி பட ஹீரோயின்

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. 

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது.

ஸ்ரேயா

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாக நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் வாயிலாக கலந்துரையாடும் போது அவர் இதனை தெரிவித்தார். நடிகை ஸ்ரேயா ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய சத்ரபதி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்துள்ளார்.