பல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

பல ஆண்களுடன் தொடர்பு: காதலித்து திருமணம் செய்த மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுண்ணாம்புச் சூளை பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான கவுஸ்பாஷா; வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி 29 வயதான அஸ்வினி. இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 12 மற்றும் 10 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை, கணவன் மனைவி இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கவுஸ்பாஷா, அங்கிருந்த கட்டையால் அஸ்வினியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அஸ்வினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.


ஓசூர் நகர போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவுஸ்பாஷாவைப் பிடித்து விசாரணை நடத்தியதில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.

குடிக்கு அடிமையான கவுஸ்பாஷா தினசரி மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இதற்கிடையே அஸ்வினிக்குப் பல நபர்களுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கண்டித்துள்ளார் கவுஸ்பாஷா; ஆனாலும் அஸ்வினி தனது தொடர்புகளை விடவில்லை.

மேலும் கவுஸ்பாஷா வேலை முடித்து வீட்டிற்கு போதையில் வரும்போது அஸ்வினி சமைத்து சாப்பாடு போடமாட்டார்.திங்கட்கிழமை அன்றும், அஸ்வினி சமைக்காததால் சண்டை ஏற்பட்டுள்ளது; ஆத்திரத்தில் கட்டையால் அவரை அடித்துக் கொலை செய்துள்ளார் கவுஸ்பாஷா.