ஸ்ரீலங்காவில் பொலிஸார் மீது கைக்குண்டு வீச்சு!

ஸ்ரீலங்காவில் பொலிஸார் மீது கைக்குண்டு வீச்சு!

பொலிஸார் மீது கைக்குண்டை வீசி விட்டு தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் படி, வெல்லவயா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் ஒருவரை கைது செய்வதற்காக வெல்லவயா பொலிஸ் அதிகாரிகள் வெல்லவாய பங்குவ பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது குறித்த சந்தேகநபர் கைக்குண்டு ஒன்றை வீசி விட்டு தப்பி ஓட முயற்சித்ததாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த கைக்குண்டு வெடிக்கவில்லை என்றும், குறித்த சம்பவத்தில் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.