மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம்

மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அந்த கட்சியின் விசேட கூட்டம் ஒன்றை இன்று கூட்டியுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களையும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் கீழ் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 13 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

பொலன்நறுவையில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றார். பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட நிமல் சிறிபால டி சில்வாவும் முதலிடத்தை பெற்றார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் தனித்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதுடன், அங்கஜன் ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மொத்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 14 பேர் தேர்தலில் வெற்றிபெற்றனர். வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சுதந்திரக் கட்சியின் சார்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.