பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தல் மற்றும் கொரோனா காரணமாக தாமதமாகிய பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 15 ஆயிரம் பட்டதாரிகள் தேசிய, மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இந்த திட்டத்தில் உள்ளீர்க்கப்படுபவர்கள் ஆசிரியர் மற்றும் கல்வி டிப்ளோமாவை முடித்திருக்க வேண்டுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.