நான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ஷ..!

நான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ஷ..!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்ற தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, 1945 நவம்பர் 18 அன்று ஆறு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை காலி ரிச்மண்ட், கொழும்பு நாலந்தா கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரியில் கல்வியை கற்றார்.

பின்னர் அவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார், வழக்கறிஞராக பதவியேற்றார்.அவர் முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு 1970 மே 27ஆம் திகதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 வயது நிரம்பிய மஹிந்த ராஜபக்ஷ, அப்போதைய நாடாளுமன்றின் இளைய நாடாளுமன்ற உறுப்பினரானார்.

தனது அரசியல் வாழ்க்கையின் போது அவர் மக்களின் நலன்களுக்காக பல ஜனநாயக போராட்டங்களை நடத்தினார், மேலும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் நெருங்கிய நண்பரானார்.

1982 வாக்கெடுப்பில் பெலியத்த இடைத்தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். பின் இன்று வரையிலும் இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

1994 ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷ சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தில் தொழிலாளர் அமைச்சரான இவர் பின்னர் மீன்வள மற்றும் நீர்வள அமைச்சராக பணியாற்றினார்.

பல்வேறு அமைச்சுப் பதவிகளைப் போலவே எதிர்க்கட்சித் தலைவராகவும் செயலாற்றினார்.

2004 ஆம் ஆண்டில் இலங்கையின் பிரதமரானார், 2005 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருடகால யுத்தத்தை அவர் நிறைவுக்கு கொண்டுவந்தார்.மே 18, 2009 அன்று இலங்கையில் முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடித்து உண்மையான அமைதியைக் கொண்டுவந்தார்.

அவர் அக்டோபர் 2018 இல் மீண்டும் பிரதமராக பதவியேற்பார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரது சகோதரர் கோதபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.