கடந்த 100 நாட்களில் நியூசிலாந்தின் கொரோனா நிலவரம்
50 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ள நியூசிலாந்தில், கடந்த 100 நாட்களில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்து எந்தவிதமான தகவலும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும், மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் சர்வதேச ரீதியாக பரவிய நிலையில், நியூசிலாந்தில் முன்னர் 23 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் எல்லை பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்த நிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
அதற்கு முன்னர், கடந்த பெப்பிரவரி மாதம் ஆயிரத்து 219 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டு பின்னர் பூரண சுகம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.