கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர் யார்? நீண்டஇழுபறியின் பின் அறிவிப்பு

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர் யார்? நீண்டஇழுபறியின் பின் அறிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.